நான் யார்?
நான் யார்? கடவுள் எனக்குக் கொடுத்திருப்பதைத்
தவிர, வேறு எவ்விதச் சக்தியும் எனக்கு இல்லை. என் தேச மக்களிடம்
தார்மிகமான உரிமையைத் தவிர வேறு எவ்வித அதிகாரமும் எனக்கு இல்லை.
பயங்கரமான இம்சை, உலகத்தைத் தற்போது ஆட்சிபுரிந்து வருகிறது.
அதன் ஸ்தானத்தில் அகிம்சை பரவும்படி செய்வதற்கான ஒரு தூய்மையான
கருவியாக நான் இருக்கவேண்டும் என்பது கடவுளின் சித்தமாயின்,
அவர் எனக்குச் சக்தியை அளித்து வழியையும் காட்டுகிறார். மௌனமான
பிரார்த்தனையே எனது மகத்தான ஆயுதமாகும். எனவே, சமாதான இலட்சியம்
கடவுளின் உத்தமமான கைகளில் இருக்கிறது. அவரது சித்தமின்றி எதுவும்
நடைபெறாது. நிரந்தரமான, மாறுதலற்ற அவரது சட்டப்படியே எல்லாம்
நடக்கும். சட்டம் என்பது அவர்தான். அவரையோ, அவரது சட்டத்தையோ
நாம் அறிவோம். இருண்ட கண்ணாடியின்மூலம் மாத்திரமே அவரையோ, அவரது
சட்டத்தையோ அணுவளவு அறிய முடியும். மங்கலாகத் தெரியும் அந்தச்
சட்டமே எதிர் காலத்தையொட்டி என் மனத்த்ல் ஆனந்தத்தையும், நம்பிக்கையையும்,
விசுவாசத்தையும் பூரணமாக உண்டாக்குவதற்குப் போதுமானது.
'ஹரிஜன்' - 09.12.1939
கடவுளின்
தூதன்!
பத்திரிகையிலிருந்து கத்தரிக்கப்பட்ட
செய்தி ஒன்று எனக்கக் கிடைத்திருக்கிது. நான் கடவுளின் ஒரு துதன்
என்று அதில் விசேஷச் செய்தி கிடைத்ததாக நான் கூற முடியுமாஎன்ற
கேட்டிருக்கிறார்கள். நான் செய்ததாகக் கூறப்படு அற்புதங்களைப்பற்றி
ஏற்கெனவே எழுதியுள்ளேன். கடைசியாக வந்துள்ள இந்தக் குற்றச்சாட்டையும்
நான் நிராகரித்துவிட வேண்டும். ஒவ்வொரு நல்ல ஹிந்துவையும்போல்,
நான் பிரத்திதிக்கிறேன். மனிதனைக் கண்டு அஞ்சுவதை நாம் விட்டு
விட்டு, கடவுளின் சத்தியத்தை மாத்திரம் நாடுவோமாயின் நாம் எல்லோருமே
கடவுளின் தூதர்களாகிவிட முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
மனிதனிடம் எனக்க இருந்த அச்சமெல்லாம் போய்விட்டது என்றம், கடவுளின்
சத்தியத்தையே நான் நாடுகிறேன் என்றுமே உறுதியாக நம்புகிறேன்.
எனவே, ஒத்துழையாமை இயக்கத்திற்குக் கடவுள் துணையாக இருக்கிறார்
என்றே கருதுகிறேன். கடவுளின் சித்தத்தைப்பற்றி எனக்கு விசேஷச்
செய்தி எதுவும் கிடைத்ததில்லை. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரிடத்திலும்
கடவுள் தம்மைத் தாமே தினந்தோறும் வெளிப்படுத்திக் கொள்ளுகிறார்.
ஆனால், அமைதியான அந்தச் சிறு குரலைக் கேட்காமல் நாம் காதுகளை
அடைத்துக் கொண்டுவிடுகிறோம். நம்முன் உள்ள ஜோதி ஸ்தம்பத்தைப்
பார்க்காமல் நாம் நமது கண்களை மூடிக் கொண்டுவிடுகிறோம். கடவுள்
எங்கும் நிறைந்தவராக இருப்பதை நான் உணருகிறேன். கடிதம் எழுதியிருப்பவரும்
அவ்விதமே உணர முடியும்.
எங் இந்தியா - 26.05.1921
திகைக்கவைக்கும்
தப்பெண்ணங்கள்
குஜராத்தியில் ஒரு சாதாரணப் பழமொழி உண்டு. 'ஒரு
பிரபல பாங்கர் பணத்தைச் சேர்த்துக் கொண்டே போகிறான். ஒரு பெயர்
போன திருடன் தகாத முறையில் அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறான்'.
இதுதான் அந்தப் பழமொழி. என்னை ஒரு சீர்திருத்தக்காரனாகக் கருதினாலும்
சரி, அல்லது ஒரு குற்றவாளியாகக் கருதினாலும் சரி, மிகவும் விசித்திரமான,
தரும சங்கடமான நிலைமைகளில் நான் சிக்கிக்கொள்ளுகிறேன். எனக்குத்
தெய்வீகமான அற்புத சக்திகள் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
சத்தியத்தில் எனக்குள்ளள பெருமதிப்பு, தடுக்கமுடியாத உழைப்பு,
எதிராளிகளிடம் நியாயமாக நடந்துகொள்ளுதல், எப்போதும் தவறுகளை
ஒப்புக்கொள்ளும் ஆர்வம், பகுத்தறிவுக்கு இணங்க நடந்துகொள்ள வேண்டுமென்று
மக்களை இடைவிடாது கேட்டுக் கொள்ளுதல் முதலியவற்றின் மூலம் நான்
பெறும் சக்திகளைத் தவிர, எனக்கு வேறு எவ்வித சக்தியும் இல்லை.
எனக்கு அசாதாரண சக்திகள் இல்லை என்ற நான் கூறுவடிதக் கபடமற்ற
பாமர மக்கள் நம்ப
மறுக்கிறார்கள். அது போலவே அரசியல் விஷயங்களில் முற்றிலும் யோக்கியப்
பொறுப்பான நடவடிக்கைகளைக் கண்டறியாதவர்கள், என் மீது எல்லா விதமான
குற்றங்களையும் சுமத்துவதில் விடாப்பிடியாக இருந்து வருகிறார்கள்.
எங் இந்தியா - 13.04.1921
நான்
மதபோதகன் அல்ல
என்னை நான் ஒரு மத போதகள் என்று ஒரு காலத்திலும்
கருதியதில்லை. அகிம்சையையோ அல்லது என்னுடைய உபதேசத்தையோ ஒப்புக்கொள்ளவேண்டும்
என்பதற்காக எக்காலத்திலும், யாரையும், அவரது சொந்த மதத்தை நிராகரிக்கவேண்டுமென
நான் கேட்டதுமில்லை. நான் அறிந்தவரையில், எந்த மதமும் இம்சையை
அனுசரிக்க வேண்டுமென வற்புறுத்தவில்லை. ஆனால், அகிம்சை சாத்தியமாக
இராத இடத்த்ல், பெரும்பாலான மதங்களும் இம்சையை அனுமதித்திருக்கின்றன.
எனினும், மற்ற மதங்களைப்பற்றித் துர்மானிக்க எனக்கு உரிமை இல்லை.
எல்லா மதங்களிடத்திலும் எனக்குச் சமமான மரியாதை உண்டு. மற்றவர்கள்
எனது மதத்திற்கு மரியாதை காட்ட வேண்டுமென நான் எதிர்பார்த்தால்,
நானும் மற்ற மதங்களுக்கு மரியாதை காட்டவேண்டும்.
நான் சாதாரண மனிதனே
சத்தியத்தை நாடுவதில் பைத்தியம் உள்ளவனை அசாதாரண
மனிதன் என்று கூறுவதாக இருந்தாலொழிய, நான் ஓர் அசாதாரண மனிதன்
அல்ல என்ற அடிக்கடி கூறி வந்திருக்கிறேன். யோக்கியமான ஒவ்வொரு
மனிதனும் பைத்தியமாகத் தான் இருக்க வேண்டும். அந்த முறையில்
நானும் நிச்சயமான ஒரு பைத்தியமே. முனிவர் என்ற பட்டத்தை நான்
நிராகரித்துள்ளேன். ஏனெனில், எனது எல்லைகளையும், குற்றம் குறைகளையும்
நான் பூரணமாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். நான் இந்தியாவின் ஊழியன்.
அதன்மூலம் மானிடவர்க்கத்தின் ஊழியன் என்றே கூறிக்கொள்ளுகிறேன்.
எனக்குப்
பிடிக்கவில்லை.
ஜனங்கள் எனக்குக் கொடுத்துள்ள 'மகாத்மா' என்ற
பட்டம் எனக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பட்டத்திற்கு நான் தகுதியற்றவன்.
எனினும், எனக்கு நானே ஒரு பட்டம் கொடுத்திருக்கிறேன். அந்தப்
பட்டத்தைக் குறித்து நான் பெறுமை அடைகிறேன். அதாவது, என்னை நான்
ஒரு சத்தியாக்கிரகி என்ற கூறிக்கொள்கிறேன். அந்தப் பட்டத்திற்க
நான் தகுதியானவனாக இருக்கவேண்டும் அல்லவா? எனவே, சந்தர்ப்பம்
ஏற்பட்டபோதெல்லாம் நான் கசப்பான உண்மையைக் கூறாமல் இருக்கமுடியாது.
எங் இந்தியா -
19.03.1931