சரியான பாதையில் ஒரு சோதனை

(குஜராத் வித்யாபீடத்தின் அத்யட்சகர் என்ற முறையில் மகா வித்தியாலயத்தின் மாணவர்களும், ஆசிரியர்களும் அடஙகிய கூட்டத்தில் காந்திஜி செய்த சொற்பொழிவு கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது)

இன்று காலை எனக்கு மூன்று கடிதங்கள் கிடைத்தன. முடிந்தால் வித்தியாபீடத்திற்குத் தீ வைத்துவிடும்படி ஒருவர் எழுதியிருக்கிறார். இதை எழுதியவர் வித்தியாபீடத்தில் முன்பு மாணவராக இருந்தவர். வித்தியாவீடம் இரு வரையில் உபயோகமான பதையும் செய்யவில்லையென்று அவர் கூறுகிறார். வித்தியா பீடத்தில் உள்ளவர்கள் மனம் பொனவாக்கில் நடந்து கொள்ளும் தன்மை வாய்ந்தவர்களாக இருக்கிறார்களென்றும், அருமையான உணஹவகளை உட்கொள்வதில் ஆனந்தம் அடைகிறார்களென்றும் இரண்டாவது கடிதத்தல் புகார் செய்யப்பட்டிருக்கிறது. இங்கே மாணவர்கள் எளிய வாழக்கை நடத்துகிறார்களென்றும், இதனால் அவர்கள் நல்லொழுக்கம் பெறுவார்களென்றும் நினத்துக்கொண்டு தம்முடைய பிள்ளையை இங்கு அனுப்பியதாக அவர் கூறுகிறார். மூன்றாவது கடிதம் சென்னையிலிருந்து வந்தது. இன்று நான் செய்யும் பிரசங்கத்தில், இந்தியா முழுவதுக்குமே உபயோகமாக இருக்கக்கூடியதாக ஏதாவது இருக்கவேண்டுமென்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

இப்போது நான் என்ன செய்வது? இந்த மூன்றில் நான் எதைச் செய்வது? இதில் எதையுமே நான் செய்யப்போவதில்லை. தோற்றிவிப்பதிலும், வளர்ப்பதிலும் எனக்குப் பெரும் பங்கு இருந்த ஒரு நிறுவனத்திற்கு நான் எப்படித் தீ வைக்க முடியும்? ஆங்கில ஓவியர் ஒருவர் ஒரு கதை சொல்லியிருக்கிறார். ஒரு சமயம், வேடிக்கைக்காக அவர் தம்முடைய சித்திரங்கியில் ஒன்றைக் கடைத் தெருவில் மாட்டி வைத்தார். அந்தச் சித்திரத்தில் ஏதாவது குறைபாடு காணப்பட்டால் அங்கே பென்சிலால் ஒரு குறிபோடும்படியும் அடியில் எழுதி வைத்தார். அடுத்த நாள் அவர் அங்க போய்ப் பார்த்த பொழுது படம் முழுவதும் குறிகளாக இருந்தன. 'இந்த ஓவியத்தல் எனக்குத் திருப்தி இருக்கும்வரை அதை நான் கொளுத்த மாட்டேன்' என்று அவர் சொன்னார்.

இன்று காலை இந்த ஓவியருடைய ஞாபகம் எனக்கு வந்தது. அவர் கொன்னதும் உண்மையானதாகவே எனக்குப் பட்டது. குறைபாடுகளை நாம் தேடிக் கொண்டிருந்தால் அதற்கு முடிவே இருக்காது. கடவுள் மனிதர்களுடைய மனத்தில் சில விஷயங்களின் மீது பற்றுதல் ஏற்படும்படி செய்திருக்கிறார். அதற்கிணங்கவே நாம் நடந்து கொண்டிருகிறோம். வித்தியா பீடத்தை மிகவும் கடுமையாகத் தாக்கி எழுதியுள்ள நிருபர், வித்தியா பீடத்திலுள்ள ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் விசேஷச் சிறப்பு எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார். தம்முடைய கடிதத்தை 'நவஜீவன்' பத்திரிகையில் வெளியிட்டு, அதைப்பற்றி என்னுடைய கருத்துகளை தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக கொண்டிருகின்றார். ஆனால், நான் அப்படிச் செய்யப் போவதில்லை. மாணவர்களிடம் எளிமை காணப்படவில்லை என்ற புகார் சம்பந்தபட்டவரையில், அதை விருப்பு வெறுப்பின்றி நீங்கள் பரிசீலனை செய்து, ஆவன செய்ய வேண்டும். சென்னையிலிருந்து வந்த கடிதத்தை நான் கவனித்துக் கொள்கிறேன். இந்தச் சொற்பொழிவை யாரும் வெளியிட்டிருக்கவிட்டால் நான் ஒரு பெரிய சொற்பொழிவைச் செய்திருக்க வேண்டும் என்று அவர் நினைப்பார்.

முன்னுரையாக இவ்வளவையும் சொல்லி விட்டேன். உங்களிடையே இன்று நான் என்ன பேச வேண்டும் என்பதை நன்றாக யோசித்துத்தான் வைத்திருக்கிறேன். நான் யோசிக்கவில்லை என்று சொல்ல மாட்டேன். அப்படிக் கூறுவது உண்மையானதாக இராது. அது எனக்குப் பிடிக்கவில்லை. எராட்ச் சிறைச்சாலையில் அமைதியான சூழ்நிலையில் இரண்டு வருடக் காலம் யோசிப்பதற்கு எனக்கு அவகாசம் இருந்தது. அந்தக் காலத்தில் என்னுடைய பழைய கருத்துகள் ஊர்ஜிதமாயின. தேசத்தின் முன்பு நான் சமர்ப்பித்த வேலைத் திட்டத்தைப்பற்றி நான் கொஞ்சமும் வருந்தவில்ல். அதே மாதிரி, குஜராத்தியில் நாங்கள் தோற்றுவித்த வித்தியா பீடத்தில் ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் குஜராத்திகளை நியமிக்காமல், ஸிந்திக்காரர்களையும், மகாராட்டிரர்களையும் நியமித்ததைப் பற்றியும் நான் வருந்தவில்லை. ஸிந்துவிலும். தக்காணத்திலும் நான் காணும் நல்லவைகளைச் சேகரிப்பதே நம்முடைய தருமமாகும். கிருபளானி தம்மை ஒரு பீகாரர்காரராக நினைத்துக் கொண்டால், அப்படியே அவரை நாம் எடுத்ககொள்வோம். குஜருத்திலிருந்தும் அவர் கற்றுக் கொள்ள வேண்டியது ஏதாவது இருக்கும். பீகாரில் அவர் ஒரு நெசவாளராக இருந்தார். இங்கு அவர் நூற்பதற்கும் பஞ்சுப்பட்டைப் போடுவதற்கும் கற்றுக்கொள்வார். பின்னர், அவர் தம்மைப் பீகார்காரர் என்று மட்டுமல்லாமல் குஜராத்திக்கார் என்றம் சொல்லிக்கொள்வார். வேண்டியவர்கள் நாமேதான். அவர் ஸி3துவிலிருந்து வந்தவர்; ஆகையால் நம்முடைய விருந்தாளி. நம்முடைய நன்மைக்காக அவரை நாம் இங்க எகாண்டு வந்திருக்கிறோம். ஆகையால் அவர் அளிப்பதை நாம் பெற்றக் கொள்வோம். அதனால் குஜராத்துக்கு நஷ்டம் ஒன்றுமில்லை; நல்ல இலாபம்தான் கிடைக்கும். என் விருப்பப்படி விட்டால் மகாவித்தியாலயத்தில் ஒரு குஜராத்தியைக் கூட வைத்திருக்க மாட்டேன். முழுவதும் ஸிந்திக்காரர்களையும், மராட்டிரர்களையுமே நியமிதிது அவர்களை நம்முடைய தாய் மாமன்களாகவும். சிரிய தகப்பனார்களாகவும் ஆகும்படி கேட்டுக்கொள்வேன். உண்மையிலேயே அவர்கள் நமது தாய் மாமன்களாகவும் சிறிய தகப்பனார்களாகவும் ஆகிவிட்டால். நமக்கு வேறு என்ன வேண்டும்?

வித்தியாபீடத்தை நிறுவும்போது நம்முடைய நோக்கம் என்ன? ஒத்துழையாமையைப் பலப்படுத்துவதற்காகவே அதை ஏற்படுத்தினோம். நாம் யாருடன் ஒத்துழையாமை செய்ய விரும்பினோம்? அரசுக் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுடனா? இல்லை; அந்த மாதிரி நினைக்கவே கூடாது. அவர்கள் சம்பந்தப்பட்டுளள கல்வி முறையுடன்தான் நம்முடைய உத்துழையாமை. இந்த முத்துழையாமையின் தனிச் சிறப்பையும், இந்த ஒத்துழையாமையின் மூலம் நான் என்ன சாதிக்க உத்தேசிக்கிறோம் என்பதையும் பற்றிச் சிந்தித்துப பார்த்த போது எனக்கு இரண்டு கதைகள் ஞாபகம் வந்தன; முதலாவது கதை சிங்கத்தையும் ஆட்டையும் பற்றியது. சிங்கமும், ஆடும் ஒரே இடத்தில் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன; சிங்கம் கூட்டுக்குள் இருந்தது. ஆடு அதற்கு வெளியே இருந்தது. ஆடு தின்பதற்கு அருமையான தழைகளும், மற்ற ஆகார வகைகளும் இருந்தன. ஆனால், அது நாளுக்க நாள் மெலிந்து கொண்டே வந்தது. பக்கத்தில் சிங்கம் இருப்பதால் ஆடு வளரவில்லை என்று என்னைப் போன்ற ஒரு புத்திசாரி கண்டு பிடித்தான். சிங்கத்தின் அருகாமையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவுடன் அந்த ஆடு ஆனந்தக் கூத்தாடியது. அதற்கு மிகவும் மட்டமான ஆகார வகைகள் கொடுக்கப்பட்டன. அப்படி இருந்தும் அது சில நாட்களுக்குள்ளாகவே நன்றாக கொழுத்துவிட்டது.

மற்றொரு கதை, ஸர் நாராயண் சந்தவர்க்கார் எழுதியது. சிறையில் இருந்தபோது இதை நான் படித்தேன். அப்போது புனாவில் இருந்த ஸர் நாராயண் உலாவப் போய்க்கொண்டிருந்தார். ஒரு கிழவி ஓர் ஆட்டுக் குட்டியை வீட்டிற்கு எடுத்துக கொண்டு போவதைக் கண்டார். இந்த ஆட்டுக்குட்டி ஒரு பெரிய பணக்காரருக்குச் சொந்தமானது. ஆகாயால் அதற்கு வேண்டிய எல்லாத் தீனிகளும் கிடைத்துக் கொண்டிருந்தன. அப்படியும் அது சந்தோஷமாய் இருக்கவில்லை. அந்தக் கிழவி அதை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போனதால் அது சந்தோஷத்தில் துள்ளித் துள்ளி ஓடிக் கொண்டிருந்தது. ஏன்? அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்திற்குப் போவதால் அதற்கு அவ்வளவு சந்தோஷம். உயிருள்ள பிராணி ஒன்று சுதந்திரமான சூழ்நிலையில்தான் வளர முடியும், அடிமைத்தனத்தில் வளர முடியாது. இதே உண்மையைத்தான் துளசிதாசர் தமக்கே உரித்தான தனி பாணியில், "அடிமைத்தனத்துக்குச் சந்தோஷம் இருக்க முடியும் என்று கனவில் கூடக் காண முடியாது" என்று கூறி இருக்கிறார்.

அரசால் அளிக்கப்படும் கல்லியில், மிகச் சிறந்த வசதிகள் இருக்கலாம்; அழகான கட்டிடங்களும் திறமைமிக்க ஆசிரியர்களும் இருக்கலாம். ஆனால், தமது நெற்றியில் அடிமைத் தனத்தைக் காட்டும் கருப்புக் குறி எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். எழுத்தர் போன்ற ஒரு சில உத்தியாகத்திற்கு மேல் அதிகமாக அதிலிருந்து நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது. இன்றைக்கொல்லாம இருந்தால் ஒரு ஒரு வக்கீலாகலாம். ஆனால், பட்டதாரிகளில் பெரும்பாலோர் மாதம் முப்பது ரூபாய் சம்பளம் கிடைக்கும் வேலையையே தேடுவார்கள். அத்துடன் அவர்கள் திருப்தி அமையவும் வேண்டியிருக்கலாம். ஒரு சிலர் குஜராத் கல்லூரியில் பேராசிரியர்கள் ஆகலாம். இங்கு, இந்த வித்தியாபீடத்தில் வசதிகள் ஒன்றும் இல்லை. பல்வேறு பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதற்குக்கூட போதிய ஏற்பாடுகள் இல்லாமல் இருக்கலாம்; உங்களுக்கு என்ன சொல்லிக் கொடுக்கப்படுகிறதோ அத்துடன் திருப்தி அடைய வேண்டியிருக்கலாம். கட்டிடம் சம்பந்தப்பட்டவரையில், உங்கள் தலைக்கு மேல் கூரை கூட இல்லாமல் இருக்கக்கூடம். வீட்டின் சொந்தகக்காரர் தமக்கு விருப்பமான போது எந்தச் சமயத்திலும் நம்மை வெளியேற்றிவிடக்கூடம். அன்றாடத் தேவைகளுக்கான பணத்தை வல்லபாய் பிச்சை வாங்க வேண்டியிருக்கிறது. இந்த வித்தியாபீடம் எவ்வளவு காலம் நிலைத்து நிற்கும் என்பது நிச்சயமில்லை. இன்று அது இருக்கிறது. நாளைக்கு அது இல்லாமல் இருக்கலாம். குஜராத் கல்லூரியின் மீது சூரியன் மறைவதே இல்லை; அதன் நிலை உறுதியாக இருக்கிறது. ஆனால் உங்களுடைய வித்தியாபீடத்தின் மீது சூரியன் அன்றாடம் உதித்து மறைகிறான். இதுதான் உலகத்தின் இயற்கையான சட்டம். இந்தக் கஷ்டங்களை எல்லாம் தாண்டித்தான் நம்முடைய இலட்சியத்தை அடைய வேண்டும்.

நம்முடைய இலட்சியத்தை நாம் உயர்வானதாகவே ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த உயர்ந்த இலட்சியத்திற்கு ஏற்ப நாம் நடந்து கொள்ளத் தவறி விடுகிறோதம் என்பது உண்மையே. பல சமயங்களில் நாம் தவறுகள் செங்யகிறோம்;மிகப் பெரிய தவறுகளைக்கூடச் செய்கிறோம். ஆனால் அவை நல்ல காரியங்கள் என்ற நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில்லை.

விடுதலைக் இட்டுச் செல்வதே ஞானம் என்பதுதான் நம்முடைய இலட்சியம். 'நமது தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் ஒரு குறுகிய அர்த்தத்தைக் கொடுத்து, இந்த மகத்தான உண்மையை நாம் தவறாகப் பயன்படுத்த வில்லையா?' என்று கிஷோர்லால் பாய் என்னிடம் கேட்டார். அவர் கேட்டதைப்பற்றி நான் ஆழ்ந்து சிந்திக்கத்தான் வேண்டும். ஆனால், நாம் செய்து கொண்டிருக்கும் காரியங்களில், இம்மாதிரி தவறாகப் பயன்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. நாட்டின் விடுதலை என்ற அடிப்படையான விடுதலையைப் பெறுபவன்தான் அந்த உயர்ந்த விடுதலையையும் பெற முடியும். நாட்டின் விடுதலையைப் பெற முடியவில் என்றால், அந்த உயர்ந்த விடுதலையைப் பெற முடியும் என்று எப்படு நம்புவது? ஆகையால், விடுதலை என்ற வார்த்தைக்கு உள்ள இரு அர்த்தங்களுமே நம்முடைய இலட்சியமாகும். அதாவது தாய் நாட்டின் விடுதலை என்ற வழக்கமான அர்த்தம்; உலக பந்தத்திலிருந்து விடுதலை என்ற உண்மையான அர்த்தம்.

இந்த வித்தியாபீடத்தை ஏன் ஏற்படுத்தினேன் என்று இன்ற எனக்கு வருத்தமோ, பச்சாத்தாபமோ இல்லை. கல்லூரிப் பகுதிகளில் உள்ள எல்லாம் பையன்களுமே இங்கிருந்து ஓடிப்போய், அரசுக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டால்கூட நான் சரித்துககொண்டுதான் இருப்பேன். நான் புத்திசாலி என்றும், அவர்கள் முட்டாள்தனமாக நடந்துகொண்டார்கள் என்றுமே சொல்வேன். தெசத்தைத் தாழ்நிலையிலிருந்து மீட்பதற்கு வேறு வழியே இல்லை. நாம் எல்லோருமே ஒரு பெரிய மாயையின் பிடிட்பபில் உண்மை நமக்குப் புலப்படவில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், புறக்கணிப்பைத் தவிர வேறு வழியே கிடையாது என்று சாகும் வரையில் திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டேதான் இருப்பேன். முழு ஒத்துழைப்புக்கான கட்டம் வந்துவிட்டது என்று எனக்குத் தோன்றும்போதுதான் புறக்கணிப்பை நிறுத்தச் சொல்வேன். அது வரையில், தேசம் முழுவதும் என்னை தனியாக விட்டுவிட்டால்கூட புறக்கணிப்பை நான் விடாமல் பிடித்துக்கொண்டுதான் இருப்பேன். எனக்கு அனுபவம் இருக்கிறது. பல வருடங்களாகச் சிந்தனை செய்த பிறகுதான் இந்த முடிவுக்கு நான் வந்தேன். அதனால்தான் நான் இப்படிச் கொல்கிறேன். நீண்ட காலம் தவமிருந்து, சிந்தனை செய்தபிறகு நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன் என்றும் சொல்லுவேன். இப்போது நான் சொல்லுவதைத் தவிர பேறு எதையும் நான் சொல்ல முடியாது. 20x5 என்பதன் விடை 100 என்பதை அறிந்த ஒரு மனிதன், 20x4 அல்லது 20x6 இன் விடையும் 100 தான் என்ற எப்படிச் சொல்ல முடியும்? எராவ்டாச் சிறையில் தான் செலவிட்ட காலம் இக்கருத்துக்களை மேலும் உறுதிப்படுத்திவிட்டது.

படிப்பை முடித்த பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி இருக்கிறது. "வேலைவாய்ப்பை பற்றி" நான் எதுவும் சொல்லுவதற்குக் கிருபளானி விட்டு வைக்கவில்லை. நான் பயத்தை விட்டொகிக்க விரும்புகிறோம் என்பது முக்கியமான விஷயம். படிப்பை முடித்த பிறகு, நீங்கள் விருமபினால் உங்கள் அறிவைப் பணம் சம்பாதிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், நீங்கள் பயத்தை விட்டொழிக்க வேண்டும். ஓர் ஆங்கில இளைஞன் என்ன செய்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆங்கிலேயர்களை நான் கேவலமாக நினைக்கவில்லை. ஆங்கிலேயர்களை நான் நேசிக்கிறேன் என்பது பலருக்குத் தெரியாது. அவசியமானபோது ஆங்கிலேயர்களைப் பின்பற்றுவதை நான் ஆட்சேபிக்கவில்லை. என்னுடைய தன்மையை நான் விட்டுவிடக்கூடாது என்பதுதான் முக்கியம். அப்படி விடாமல் இருப்பதனால், எங்கிருந்து வேண்டுமானாலும வர்ணங்களைக் கொண்டு வந்து என் விருப்பப்படி வித்திரம் தீட்டலாம். எப்போதாவது நாங்கள் உங்களை விட்டுப்போக வேண்டிருந்தால், நாங்கள் என்ன செய்வோம் என்று என்னுடைய ஆங்கில நண்பர்கள் என்னைக் கேட்டதே இல்லை. தம்முடைய வேலையை விட்டு விட்டு அவர்கள் என்னிடம் வந்தார்கள். சிலர் விஷயத்தில், அவர்களுடைய தேவைகளை நான் தவறாக மதிப்பிட்டேன். ஆனால், அதைப்பற்றி அவர்கள் என்னிடம் புகார் செய்வதே இல்லை. ஏனெனில், நான் நல்லெட்ணணத்துடன்தான் செய்தேன் என்று அவர்களுக்குத் தெரியும். மேலும், தம்முடைய வாழ்க்கைக்குத் தாம் காந்தியை நம்பியிருக்கவில்லை என்றும் அவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய வாழ்வைக் கவனித்துக் கொள்பவர் கடவுள். கடவுள்தான் நம்மை ஈன்றெடுத்தார்; நாம் வாழ்வதற்கு வேண்டிய உணவையும் அவர் அளிப்பார். வேறு விதமாக இருக்க முடியாது. முஸ்லீம்களும், இந்துக்களும் இதை அறிவர். ஆனால், இன்று முஸ்லீம்கள் தமது குரானையும், இந்துக்கள் தமது பகவத் கீதையையும் மறந்துவிட்டு, தவறான இலாப நஷ்டக் கணக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 'நாம் பட்டினி கிடப்போமோ' என்று கவலைப்படுகிறார்கள். அதற்காகக் கவலைப்படாதவர்கள் பட்டினியால் செத்துவிடுவதில்லை என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். எதற்காக நீங்கள் கவலைப்படி வேண்டும்? பள்ளிக்கூடத்தில் நீங்கள் கற்றுகொள்ள வேண்டியது இதுதான்: உங்களுடைய இலட்சியத்தில் தளராத உறுதியும், அதன் விளைவுகளைப் பற்றிக் கவலையில்லாமல் இருப்பதும்தான். பிரிட்டனில் உள்ள பள்ளிச் சிறுவர்களும், தம்முடைய வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. படிப்பை முடித்துக்கெர்ண்டு, பின்னர் பணம் சம்பாதிப்பதற்குத் தம்முடைய சாமர்த்தியத்தை உபயோகித்துக் கொள்ளும்படி ஆசிரியர்கள் அவர்களிடம் சொல்லுகிறார்கள். அதனால்தான் அந்தச் சிரிய தீவில் உள்ள மக்கள் உலகத்தின் மறு கோதடிக்குக் கூடப் போவதை நாம் பார்க்கிறோம். என்னுடைய ஆங்கில நண்பர்களில் பலர் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். "ஆனால், அவர்களுக்குப் பிரிட்டிஷ் கொடியின் பாதுகாப்பு இருக்கிறதே" என்று சொல்லலாம். இந்தக் கொடு அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தாலும் சோறு போடுவதில்லை. அவர்கள் கொல்லப்பட்டால், பிரிட்டிஷ் கொடி செயல்படி ஆரம்பிக்கும். அவர்களுடைய பீரங்கிகள் முழங்கிக் கொலைகாரர்களைத் தண்டிக்கும். இம்மாதிதியான பாதுகாப்பு நமக்கு வேண்டாம். ஆனால், இப்போது நான் உங்களுக்கு உணர்த்த விரும்புவது அது அன்று. வாழ்க்கைக்கு என்ன செய்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது என்பதை மட்டுமே இப்போது நான் உங்களுக்கு வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறேன். அவசியம் ஏற்பட்டால் ஒரு தோட்டியாகவோ, நெசவாளியாகவே வேலை செய்வேன்; ஆனால், மானக்கேடான எதையும் செய்யமாட்டேன், யாரிடமும் பிச்சை கேட்கமாட்டேன் என்று நீங்கள் உறுதி கொள்ள வேண்டும். உங்களுடைய பெற்றோர்கள், சகோதரர்கள், சகோதரிகளுக்கு என்ன நேர்ந்துவிடுமோ என்று ஏன் கவலைப்பட வேண்டும்? இருட்டை நீக்குவதற்கு ஒதே ஒரு விளக்குப் போதும். அதே மாதிரி உங்கள் குடும்பத்தில் நீங்கள் நல்ல பிள்ளையாக இருந்தால் அதுவே போதும். உங்களுடைய பெற்றோர்களையும், சகோதரர்களையும், சகோதரிகளையும் நீங்களே காப்பாற்ற வேண்டியிருந்தாலும் அதற்காகக் கவலைப்படக் கூடாது. 'உனக்கு உணவு போட்டு விட்டுத்தான் சாப்பிடுவேன்; ஆனால், சாதாரண ஆகாரம்தான் கிடைக்குமே ஒழியப் பட்சண வகைகள் எதுவும் கிடைக்காது' என்று உங்கள் சகோதரியிடம் சொல்லுங்கள். அவளுக்காக நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் போது அவள் சும்மா உட்கார்ந்திராமல் தானும் வேலை செய்யும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அந்தத் துணிச்சல் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.

ஆசிரியர்களாகிய நம்மைப்பற்றியும் சில வார்த்தைகள். நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்காக நாம் என்ன கேட்பது? நமக்காக நாம் ஒன்றும் கேட்கவில்லை. ஒரு விஷயத்த ஒளிவு மறைவு இல்லாமல் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். எப்போதாவது ஆசிரியர்களிடம் நீங்கள் நம்பிக்கை இழந்துவிட்டால், பணம் பண்ணுவதற்காகவே அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், தியாகம் செய்யும் தேசப்பக்தர்கள் என்ற வேஷம் போடுவதற்காகவோ அல்லது புகழுக்காகவோ அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தாராளமாக அவர்களை விட்டு விட்டுப் போய்விடலாம். அன்றொரு நாள் ஒரு கனவான் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். அதாவது, எனக்குப் பணத்தில் ஆசை இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னுடைய நடத்தையில் பெறும் பாசாங்கு இருப்பதாகவும், மகாத்மா ஆகவேண்டும் என்ற ஆவல்தான் இதற்குக் காரணம் என்றும் அவர் கூறினார். ஒரு விதத்தில் அவர் சொன்னதும் சரிதான். ஆகையால், ஆசிரியர்கள் பெரிய மனிதர்களைப் போல் வேஷம் போட விரும்புகிறார்கள் என்ற நீங்கள் நினைத்தால், நீங்கள் அவர்களை விட்டுப் போய் அவர்களை அம்பலப்படுத்திக் கண்டிக்கலாம். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றும் இல்லை. ஆனால் ஆசிரியர்களிடம் நல்லொழுக்கம் இருப்பதாக நீங்கள் கண்டால், முழுவதும் சுமையயையும் அவர்கள் மீதே போட்டுவிடக் கூடாது. பண்டங்களை வெகுமதியாகக் கொடுப்பதுபோல் அறிவை வெகுமதியாகக் கொடுப்பதில்லை; அது சாத்தியமுமில்லை. உங்களிடம் உறங்கிக் கொண்டிருக்கும் சக்திகளை வெளிக் கொணர்வதே ஆசிரியரின் வேலை ஆகும். ஆனால், அதை ஒளி பெறச் செய்யவோ, வளம்பேறச் செய்யவோ உங்களால்தான் முடியும், உள்ளே இருப்பதை வெளியே கொண்டு வருவது என்பதுதான் கல்வி என்ற ஆங்கில வார்த்தையின் அர்த்தமாகும். ஆகையால் நீங்கள் இங்கு என்ன கற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்பதைப்பற்றிக் கவலைப் படவே கூடாது. ஆசிரியர்களிடம் நம்பிக்கை வைத்து அவர்கள் கற்றுக்கொடுப்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்களுடைய ஒழுக்கங்களுக்குப் பாதுகாப்பு உங்களிடமேதான் இருக்கிறது. உங்களுடைய நடத்தைக்கு ஆசிரியர்கள் காவலர்களாக இருக்க முடியாது. வேடிக்கையாகப் பொழுது போக்குவதற்காக நாம் இங்கு வரவில்லை என்பதை நீங்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். உங்களுடைய படிப்பிலும், உங்களுடைய உடலைப் பலப்படுத்திக்கொள்வதிலும் உங்களுடைய துணிச்சலை வளர்த்துக் கொள்வதிலும்தான் உங்களுடைய கைகளையும் கால்களையும் உபயோகிப்பதற்குக் கற்றுக்கொள்ளவேண்டும். உடலுழைப்பிற்குப் பயப்படும் மாணவர்கள் முதலில் தம் உடலைப் பலவீனப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள்; பின்னர், உடற்பயிற்சி அரங்கிற்குப் போகலாமா உன்ற யோசிக்கிறார்கள். ஆனால், பலம் பெறுவதற்கு வழி அது அன்று. உங்களுடைய இதயத்தையும், உறுதியையும் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்; பின்னர்உடலைப் பலப்படுத்திக் கொள்வது சுலபமாக இருக்கும். உங்களிடமே என் பிரார்த்தனையைச் சொல்லிக் கொள்கிறேன். உங்களுக்கும் உங்களுடைய ஆசிரியர்களுக்கும் புகழ் ஏற்படக்கூடிய விதத்தில் நீங்கள் நடந்துகொள்ளவேண்டும். நாடு முழுவதிற்குமே நம்முடைய வித்தியாபீடம் ஓர் உதாரணமும், மாதிரியும் ஆகும். கல்வித் துறையில் ஒத்துழையாமை குஜராத்தில் வெற்றி பெற்று விட்டது. இதனால் நம் வேலைத் திட்டத்தின் இந்த அம்சத்திற்குப் பெயரும், புகழும் கிடைக்கின்றன. ஆனால் இதைப் பற்றி நாம் இப்போது பேசக் கூடாது; அதை மதிப்பிடுவதற்குக் காலம் இன்னும் வரவில்லை. எதிர்காலத்தில்தான் இதை ஓரளவு நிச்சயத்துடன் செய்ய முடியும்.

நானும் ஆசிரியர்களுள் ஒருவன். ஆகையால் ஆசிரியர்களை நான் எதுவும் கேட்டுக் கொள்வது சரியாக இராது. இதை மட்டும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். அதாவது கல்வித் துறையில் உத்துழையாமை வெற்றி பெறுவதோ, தோல்வி அடைவதோ உங்களிடம்தான் இருக்கிறது. இங்கிருந்து நீங்கள் வீட்டிற்குப் போகும்போது இதை நினையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

'நவஜீவன்' - 09.06.1924


Website Designed by Gandhi Iyakkam, Thanjavur