(என் தந்தைக்கு நான் ஒரு பாரமாக இருந்துவருவதைக் குறித்து வருந்தியும், எனக்க ஆகும் செலவை நானே சம்பாதித்துக் கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்டு காந்திஜிக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். அதில் ஒரு சங்கடம் என்னவெனில், நான் எழுதியதைக் கேள்வியுற்ற என் தந்தை மிகவும் மனவேதனை அடைந்தார். ஹசரத் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் ஒரு ருதுக் கவிஞர். அவர் புரட்சி இயக்கத்திலும் தேசீய இயக்கத்திலும் மிகவும் தீவிரமாக பங்கு எடுத்துக்கொண்டிருந்தார்.)

செப்டம்பர் 15 1924

எனது அன்புள்ள ஜவாஹர்லால்,

உங்கள் சொந்த விஷயமாக நீங்கள் எழுதியுள்ள மிகவும் உருக்கமான கடிதம் கிடைத்தது. அதையெல்லாம் நீங்கள் தைரியமாகச் சமாளித்துவிடுவீர்கள் என்பதை நான் அறிவேன். தந்தைக்க இப்போதெல்லாம் எளிதில் கோபம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே அவ்விதம் கோபம் ஏற்படும்படி நீங்களோ, நானோ அற்பமான காரியம்கூட செய்துவிடக் கூடாது என்பதில் நான் மிகவும் கவலையுள்ளவனாக இருக்கிறேன். சாத்தியமாயின், நீங்கள் அவருடன் மனம் விட்டுப் பேசி, அவர் மனதத்தைப் புண்படுத்தக்கூடய எந்த நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும். அவர் மனம் வருந்துவதைக் காண என் மனம் வருந்துகிறது. அவர் எளிதில் கோபம் கொள்வது மன வருத்தத்தின் நிச்சயமான அறிகுறியேயாகும். ஹசரத் இன்று இங்கு வந்திருந்தார். ஒவ்வொரு காஙகிரஸ்வாதியும் நூல் நூற்க வேண்டும் என்ற நான் கூறும் யோசனைகூட அவருக்குச் சஞ்சலத்தை உண்டாக்குவதாக ஹசரத்தினிடமிருந்து நான் தெரிந்துகொண்டேன். நான் காங்கிரசிலிருந்து விலகிக்கொண்டு, மூன்று காரியங்களையும் அமைதியாகச் செய்து வரவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உண்மையான எல்லா ஆடவர்களுக்கும் பெண்களுக்கும் அவற்றைச் செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும். ஆனால் அது கூட மக்களுக்குச் சஞ்சலத்தைக் கொடுக்கிறது. புனா சுயராஜ்யக் கட்சியினருடன் நான் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் நூற்பதற்கு இசையவில்லை, நான் காங்கிரசிலிருந்து விலகுவதற்கும் அவர்கள் இசையவில்லை. நான் நானாக இராவிட்டால், என்னால் யாதொரு பலனும் ஏற்பட முடியாது என்பதை அவர்கள் உணரவில்லை. அது ஒரு துர்ப்பாக்கியமான நிலையாகும். எனினும் அதைக் குறித்து நான் சோர்வு அடையவில்லை. நான் கடவுளிடம் தான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். இந்த விநாடியில் செய்ய வேண்டிய கடமையை மாத்திரமே நான் அறிந்திருக்கிறேன். அதற்கு மேல் அறிந்து கொள்ளும் சக்தி எனக்க இல்லை. அப்படியிருக்க நான் ஏன் கவலைப்பட வேண்டும்?

உங்களுக்கு ஏதாவது பணத்திற்கு ஏற்படு செய்ய நான் முயற்சிக்கட்டுமா? பிரதிபலன் கிடைக்கக் கூடய அலுவலில் நீங்கள் ஏன் ஈடுபடக்கூடாது? நீங்கள் உங்களுடைய தந்தையின் பாதுகாப்பில் இருந்தால்கூட நீங்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துத்தான் உயிர் வாழ செய்யவேண்டும். ஏதாவது பத்திரிகைகளுக்கு நீங்கள் நிருபராக இருப்பீர்களா? அல்லது ஒரு பேராசிரியர் பதவியை ஏற்றுக் கொள்வீர்களா?

தங்கள் உண்மையுள்ள,
மோ.க.காந்தி


ஜோகன்னஸ்பர்க்,
நவம்பர் 22 1907

அன்புள்ள பேராசிரியர் கோகலே,

ஸ்ரீ அமீருதீன் பஜந்தார் மூலம் நான் உங்களுக்க ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறேன். சூரத்தில் நடைபெறவிருக்கும் காங்கிரசுக்க திரான்ஸ்வாலிலிருந்து வரும் பிரதிநிதிகளில் அவரும் ஒருவர். இங்கே தாங்கள் நடத்திவரும் போராட்டம், நாங்கள் எல்லோரும் முதலில் இந்தியர்கள், அடுத்தபடியாகத்தான் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், தமிழர்கள், பார்சிகள் என நாங்கள் உணர்ந்து கொள்ளும்படிச் செய்திருக்கிறது. இந்த உண்மையைத் தாங்கள் கவனிக்கக் கோருகிறேன். காங்கிரசுக்கு நாங்கள் அனுப்பியுள்ள பிரதிநிதிகள் யாவரும் முஸ்லிம்கள்தான் என்பதையும் தாங்கள் கவனித்திருப்பீர்கள். அதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். தென்னாப்பிரிக்காவுடன் தொடர்புள்ள பல முஸ்லிம்களும் காங்கிரசுக்கு வரலாம். அவர்கள் விஷயத்தில் நீங்கள் அக்கறையெடுத்துக் கொண்டு, அவர்கள் தங்கள் தங்கள் சொந்த ஊரில் இருப்பதுபோல் எண்ணும்படி எல்லா வசதிகளும் செய்துகொடுக்குமாறு நான் உங்களைக் கேட்டுக் கொள்ளலாமா? இந்தக் காங்கிரசின் விசேஷ அம்சமாக ஹிந்து - முஸ்லிம்கள் ஓர் ஒப்பந்தம் கூட செய்து கொள்ளலாம். போராட்டத்தின் மற்ற விவரங்களைப் பற்றி நீங்கள் பத்திரிகைகளிலிருந்து தெரிந்து கொண்டிருக்கலாம்.

தங்கள் உண்மையுள்ள,
மோ.க.காந்தி


லேபர்னம் சாலை, காம்தேவி
பம்பாய் ஆகஸ்டு 22, 1919

எனது அன்புள்ள சார்லி,

கன்னி பேரிங்கைப் பற்றிச் சுந்தரத்தினிடமிருந்து எனக்க மனத்தை மிகவும் கலக்கும் செய்தி கிடைத்திருக்கிது. பிரத்தியேகமாக அவளைச் சென்று பார்க்கும்படி நான் சுந்தரத்தைக் கேட்டிருந்தேன். அவரும் அவ்விதமே சென்றிருந்தார். அவள் இப்போது டேனிஷ் மிஷனில் வேலை செய்யவில்லை என்றும், இந்தியாவை விட்டு வெளியேறும்படி துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் சுந்தரம் கூறுகிறார். இந்தியாவை விட்டு வெளியேறும்படி அவள் வற்வுறுத்தப்படுவாளாயின், அது அவளுக்க மரணத்திற்கு ஒப்பாகவே இருக்கும். அவ்விஷயமாக லார்டு வில்லிங்டனுக்கு நான் எழுதிய கடிதத்தின் நகல் இத்துடன் இருக்கிறது. அவளுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். தாங்கள் உடனே சென்னைக்குச் சென்று, அவள் நாடு கடத்தப்படாமல் தடுக்க உங்களால் இயன்றதைச் செய்யுங்கள்.

அகிம்சைச் சித்தாந்தம் தான் சரியானது என்பது பற்றி என் அபிப்பிராயம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. மிருக பலம் அதிகமாவதற்குத் தகுந்தவாறு மிருக பலமுள்ளவனின் கோழைத்தனமும் அதிகமாகி வருகிறது. எள்ளளவும் அபாயமற்ற ஒருவருடைய நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக வெறுக்கத்தக்க ரகசிய போலீஸ் இயந்திரம் இயங்கி வருவதைப் பாருங்கள்! நிரபராதிகளின் உலலுக்கோ அல்லது மனத்திற்கோ தீங்கு இழைப்பதில் பங்கு எடுத்துக் கொள்வதைவிட என் உடல் முழுவதும் தோட்டாக்கள் பாய்ந்து உயிர் துறப்பதையே நான் விரும்புகிறேன்.

இன்று நமது அரசினர் எதுவும் செய்யத் துணிந்திருக்கிறார்கள். வெளிப்படையான பலத்தினால் எள்ளளவும் பலன் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளத் தத்துவ வல்லுநர் யாரும் தேவையில்லை. நான் செய்யும் முடிவுகளையோ அல்லது எனது ஊகங்களையோ நீங்கள் ஒப்புக் கொள்ளாமலிருக்கலாம். உயிரைக் கொடுத்தாவது ரௌலட் சட்டத்தை எதிர்பபது எனக்கு முக்கியமாகும். சாந்திநிகேதனில் இருப்பது உங்களுக்கு முக்கியமாகும். இவற்றைப் போல் குமாரி பேரிங்கிற்கு நம்மால் இயன்ற வரையில் பாதுகாப்பு அளிபபதும் அவ்வளவு முக்கியமாகும். இதை நீங்கள் அஞ்சிகரிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

தங்கள்
மோ.க.காந்தி

Website Designed by Gandhi Iyakkam, Thanjavur